தந்தை உடந்தை;அக்கா-தங்கை இருவரையும் துஷ்பிரயோகம் செய்த இளைஞன்!

 


இந்திய மாநிலம் மத்திய பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் சிறுமி குளிப்பதை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றிவிடுவதாக மிரட்டி அவரையும், அவரது சகோதரியையும் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

அந்த இளைஞருக்கு அவரது தந்தையும் உடந்தையாக இருந்தது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குற்றம் சாட்டப்பட்டவரின் பெயர் அங்கித் ஜாதவ். இவர் மத்தியப் பிரதேசத்தின் குவாலியர் மாவட்டத்தில் வசிக்கிறார்.

சுமார் 6 மாதங்களுக்கு முன்பு, ஜாதவ் தனது பக்கத்து வீட்டில் வசிக்கும் 16 வயது சிறுமி தனியாக கடைவீதிக்கு சென்றபோது அவரை அணுகி, தன்னுடைய செல்போனில் சிறுமி குளிக்கும் வீடியோ இருப்பதை காட்டியுள்ளார்.

அதைப் பார்த்து பதறியை அச்சிறுமியிடம், நீ மட்டும் தனியாக எனது வீட்டிற்கு வந்து என்னை சந்திக்கவேண்டும், இல்லை என்றால் இந்த விடியோவை பேஸ்புக்கில் வெளியிடுவேன் என மிரட்டிச்சென்றுள்ளார்.

வீடியோ ஆன்லைனில் வெளியிடப்படும் என்ற பயத்தில், அதே நாள் மாலை ஜாதவின் வீட்டிற்குச் சென்றார் அச்சிறுமி. அப்போது அதிர்ச்சியூட்டும் விதமாக, ஜாதவின் தந்தை அச்சிறுமியை தனது மகனுடன் ஒரு அறைக்குள் தள்ளியதாகக் கூறப்படுகிறது. அன்று, ஜாதவ் அச்சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

சில நாட்களுக்குப் பிறகு, 16 வயது சிறுமியின் அக்காவை சில வேலைக்காக எதிர்ச்சியாக அழைப்பது போல தனது வீட்டிற்கு அழைத்துள்ளார் ஜாதவ். அவர் அங்கு சென்றதும் சிறுமியின் வீடியோவைக் காட்டி மிரட்டியுள்ளார். பிறகு அவரையும் வற்புறுத்தி தன்னுடன் உறவு கொள்ள வைத்தார்.

ஆரம்பத்தில், இரு சகோதரிகளும் தாங்கள் அனுபவித்த துன்பத்தை யாரிடமும் சொல்லாமல் மௌனமாக இருந்தனர், ஆனால் பலமுறை துன்புறுத்தலுக்குப் பிறகு, நடந்ததைப் பற்றி தங்கள் குடும்பத்தினருக்கு தெரிவித்தனர்.

பின்னர் சகோதரிகளின் பெற்றோர் மகாராஜ்புரா காவல் நிலையத்தை அணுகி புகார் அளித்தனர். இதன் விளைவாக, ஜாதவ் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது,.

மேலும் அவருக்கு உதவிய அவரது தந்தை மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், ஜாதவின் தந்தை தலைமறைவாகியுள்ளார், அவரை கைது செய்வதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. 

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad