வவுனியாவில் மது போதையில் பெண்களை தாக்கிய காவாலிகள்!

 
வவுனியா ஈச்சங்குளம் பகுதியில் மதுபோதையில் சென்ற இளைஞர்கள் தாக்குதல் மேற்கொண்டதில் பெண் உட்பட நால்வர் காயமடைந்தநிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

நேற்று மாலை குறித்த பகுதியில் மதுபோதையில் நின்றிருந்த ஐந்து பேர் கொண்ட இளைஞர் குழு அப்பகுதியில் நின்ற பொதுமக்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடாத்தி விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

சம்பவத்தில் பெண்உட்பட நால்வர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய இருவரை ஈச்சங்குளம் பொலிசார் கைது செய்துள்ளதுடன், விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

குறித்த நபர்களால் இவ்வாறான சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றதாகவும் அப்பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.