திருவிழாவில் பிணத்தின் தலையுடன் சாமியாடிய நபர்!

 


பாவூர்சத்திரம் அருகேயுள்ள கல்லூரணி கிராமத்தில் சக்திபோத்தி மாடசாமி கோயில் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் முதல் வெள்ளியில் திருவிழா கொண்டாடுவது வழக்கம்.தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே கோயில் திருவிழாவில் பிணத்தின் தலையை வைத்து சாமி ஆடும் வீடியோ வைரலாகி வருகிறது.

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே கல்லூரணி கிராமத்தில் சக்திபோத்தி மாடசாமி என்ற கோயில் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் முதல் வெள்ளியில் திருவிழா கொண்டாடுவது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டும் வெள்ளி அன்று (ஜூலை 24) கொடை விழா தொடங்கியது. இக்கொடை விழாவின் சிறப்பம்சமே சாமி ஆடுபவர்கள் வேட்டைக்கு சென்று இடுகாட்டில் உள்ள பிணத்தின் தலையை வெட்டி எடுத்து அதனை அரிவாள்களில் குத்திக்கொண்டு கோயிலுக்கு வந்து நிறைவு செய்வதுதான்.

அதன்படி திருவிழாவில் சாமி பூஜையின் போது சாமி ஆடுபவர் பிணத்தின் தலையை கொண்டு வந்து கோயில் முன்பு ஆடினர். இது, கல்லூரணி ஊர் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பார்க்கப்பட்டது.

இந்தத் திருவிழாவை காண பாவூர்சத்திரம் சுற்றுவட்டார பகுதியில் இருந்து இருபதுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் அங்கு திரண்டு வந்தனர். கரோனா கட்டுப்பாடு விதிகள் காற்றில் பறக்கவிடப்பட்டன.

இது தொடர்பாக காவலர்கள் கோயில் நிர்வாகிகள் மற்றும் சாமி ஆடுபவர்கள் என 10 பேர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.மேலும் சாமியாடியவர்களின் கைகளில் இருந்த தலை, உண்மையான மனித தலையா? அல்லது போலியா? என்பது குறித்தும் விசாரணை நடத்திவருகிறார்கள். 

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை லைக் செய்து உங்கள் ஆதரவை தாருங்கள்.

Below Post Ad