யாழில் பரிதாபமாக உயிரிழந்த இளம் பெண்!யாழில் கணவர் அடுப்பிற்கு அருகில் பெற்றோல் போத்தலை வைத்த நிலையில் அதனை அறியாது, தீ குச்சியை அணைக்காமல் போட்டதால் இளம் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்தில் தீ காயங்களுடன் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இரு பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு - முள்ளியான் பகுதியில் இடம்பெற்றது.

சம்பவத்தில் யோ.பாலரஞ்சிதா (வயது32) என்பவரே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கடந்த 22ஆம் திகதி மதியம் நின்று சமைக்கும் விறகு அடுப்பில் தேநீர் வைப்பதற்கு மண்ணெண்ணைய் ஊற்றி நெருப்பை வைத்துவிட்டு தீக்குச்சியை போட்டுள்ளார்.

இதன்போது அடுப்பு அருகே பெற்றோல் போத்தல் வைக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென தீ விபத்து  ஏற்பட்டு  உடம்பில் தீப்பற்றியதால் அவர் கிணற்றுக்குள் பாய்ந்துள்ளார்.

அதன்பின்னர்  தீ காயங்களுக்குள்ளான பெண் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் 5 நாட்கள் பின்னர் நேற்று காலை குறித்த பெண் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் இறப்பு விசாரணையை யாழ்.போதனா வைத்தியசாலை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேமகுமார் மேற்கொண்டார்.

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad