கொழும்பிற்கு தொழில் தேடி சென்ற யாழ்.சிறுவன் - அவல நிலை!

 


கொழும்பிற்கு தொழில் தேடி யாழிலிருந்து சென்ற சிறுவன் வீதியோரங்களில் தூங்கும் அதிர்ச்சி சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவது,

யாழ்ப்பாணத்தை சேர்ந்த சிறுவன் ஒருவர் கொழும்பிற்கு தொழில் தேடி வந்துள்ளார். அப்போது பணப்பை, கைபேசி திருடர்களிடம் பறிகொடுத்த பின்னர், கொழும்பில் வீதியோரங்களில் தூங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

தற்போது குறித்த சிறுவன் கொழும்பில் நிர்க்கதியாகியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பகிரப்பட்டு வருகிறது.

வேலை ஒன்றுக்காக யாழ்ப்பாணத்திலிருந்து சிறுவன் அழைக்கப்பட்டுள்ளார். எனினும், அழைத்தவர்கள் அச்சிறுவனை வந்து கூட்டிச் செல்லவில்லை. இதனால், கடந்த இரண்டு வாரங்களாக அச்சிறுவன் வீதியோரங்களில் தூங்கி இரவுகளை கழித்துள்ளார்.

அவருடைய ​பணப்பை, தேசிய அடையாள அட்டை மற்றும் அலைபேசி ஆகியவற்றை கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றுவிட்டனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவலை பகிர்ந்து, சிறுவனின் உறவினர்களின் கவனத்திற்கு தகவலை கொண்டு செல்லுமாறு கோரப்பட்டுள்ளது.