ஹிஷாலினியின் மரணத்தில் மர்மம் - மயானத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு!

 


நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன் வீட்டில் மர்மான முறையில் உயிரிழந்த ஹிசாலினியின் உடல் புதைக்கப்பட்டுள்ள மயானத்திற்கு பலத்த பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

சிறுமியின் மரணத்தில் சந்தேகம் எழுந்துள்ளதுடன் சிறுயின் பிரேத பரிசோதனையில் பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து மலையகம் உள்ளிட்ட நாடளாவிய ரீதியில் ஹிசாலினியின் மரணத்திற்கு நீதி கோரி கவனயீர்ப்பு ஆர்பாட்டங்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் டயகம மேற்கு மூன்றாம் பிரிவு தோட்டத்தில் புதைக்கப்பட்டுள்ள குறித்த சிறுமியின் உடல் தோண்டி எடுத்து மீண்டும் பிரேத பரிசோதனை மேற்கொள்ளுமாறு கொழும்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை அடுத்து சிறுமின் உடல் புதைக்கப்பட்டுள்ள மயானத்திற்கு பலத்த பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.