ஆகஸ்ட் மாதம் பாடசாலைகள் திறக்கப்படும்!

 


எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தில் பாடசாலைகளை திறக்க முடியும் என கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் தடுப்பூசி நடவடிக்கை வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டமையினால் பாடசாலைகளை திறக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அது தொடர்பில் எதிர்வரும் நாட்களில் கல்வி அமைச்சர் அறிவிப்பார் என அவர் என கூறியுள்ளார்.

தற்போது கொழும்பு மாவட்டத்தில் ஆசிரியர்களில் 99 வீதமானேருக்கும், களுத்துறை மாவட்டத்தின் ஆசிரியர்கள் 99 வீதமானோருக்கும் கொவிட் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்களுக்கு தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுகின்றது. இந்த மாதம் 22ஆம் திகதிக்குள் நாட்டின் அனைத்து ஆசிரியர்களுககும் அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்பட்டுவிடும்.

ஆசிரியர்கள் ஒன்லைன் கற்கை நடவடிக்கைகளில் இருந்து விலகி ஆர்ப்பாட்டம் மேற்கொண்டார்கள் . இது மாணவர்கள் தொடர்பில் சிந்திக்க வேண்டிய சந்தர்ப்பம்.

ஆசிரியர் - அதிபர் சம்பளமத்திற்கு நியாயம் கிடைக்கும். ஜனாதிபதி இது தொடர்பில் தனிப்பட்ட முறையில் ஆராய்ந்து வருகிறார் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை லைக் செய்து உங்கள் ஆதரவை தாருங்கள்.

Below Post Ad