பொது மக்களுக்கு விடுத்துள்ள கோரிக்கை!

 


தடுப்பூசி போடும் நடவடிக்கைகளை துரிதமாக நிறைவு செய்ய வேண்டும் என்பதால், அருகில் உள்ள கோவிட் தடுப்பூசி போடும் இடங்ளுக்குச் சென்று அவற்றை பெற்றுக்கொள்ளுமாறு கோவிட் 19 தடுப்பு தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவரான இராணுவ தளபதி சவேந்திர சில்வா கோரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பு மாவட்டத்தில் தடுப்பூசிகளை வழங்கும் நடவடிக்கைகளை இந்த மாதத்திற்குள் நிறைவு செய்ய எதிர்பார்த்துள்ளதாகவும் நாட்டில் கோவிட் தொற்றை  தடுக்க இதுவே ஒரே வழி எனவும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன் கொழும்பை தவிர பிற மாவட்டங்களில் தடுப்பூசி வழங்குவதை துரிதப்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

சில இடங்களில் தடுப்பூசிகளை போட்டுக்கொள்வதில் கூடிய அக்கறையை காண முடியவில்லை. புத்தளம் மாவட்டத்தில் அதிக அக்கறையுடன் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதை காண முடிந்துள்ளது.

கொழும்பில் விஹாரமஹாதேவி பூங்கா, தியத பூங்கா போன்ற இடங்களில் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள முடியும் என்பதால், அந்த இடங்களுக்கு சென்று துரிதமாக தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளுமாறும் இராணுவ தளபதி கோரிக்கை விடுத்துள்ளார்.