பேஸ்புக்கில் இளைஞரை ஏமாற்றிப் பணம் பறித்த மூன்று பிள்ளைகளின் தாய்!

 


முகநூல் ஊடாக ஆண் ஒருவரை ஏமாற்றிப் பணம் பறித்து வந்த பெண்ணொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

தம்புள்ளையைச் சேர்ந்த 40 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

வேறு யுவதிகளின் அழகிய புகைப்படத்தைப் பயன்படுத்தி, முகநூல் கணக்கு ஆரம்பித்து, தனது தொழில் ஆசிரியர் எனவும், வயது 30 எனவுமே முகநூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவருடன் தொடர்பைப் பேணிய 32 வயது இளைஞர் ஒருவர் சுமார் 9 இலட்சம் ரூபா வரை வங்கிக் கணக்கில் பல தடவைகள் வைப்பிலிட்டுள்ளார். பின்னர் தொடர்பு இல்லாமல்போயுள்ளது.

குறித்த இளைஞரால் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டுக்கமையவே கைது இடம்பெற்றுள்ளது. நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மேலதிக பொலிஸ் விசாரணைகள் இடம்பெறுகின்றன.

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad