யாழில் மேலும் அதிகரிக்கும் கொரோனா!

 


யாழ்.மாவட்டத்தில் 65 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் 78 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ்.பல்கலைக்கழகம், யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடங்களில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

யாழ்.போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகூட பரிசோதனையில் அடையாளம் காணப்பட்டவர்களில் உயிரிழந்த நிலையில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட யாழ்.மாவட்டத்தினைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞர், மன்னார் மாவட்டத்தினைச் சேர்ந்த 37 வயதுடைய நபர் ஆகியோருக்கும் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ்.போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசேதனையில் யாழ்.மாவட்டத்தினைச் சேர்ந்த 20 பேர் உட்பட 33 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Tags

Top Post Ad

Below Post Ad