யாழில் கசிப்பு காய்ச்சி விற்ற 4 பேர் கைது.


யாழ்ப்பாணத்தில் கசிப்பு காய்ச்சிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புதியசெம்மணி வீதி வயல்வெளிக்குள் நடுவே காட்டுபகுதியில் இன்று (11) அதிகாலை 12.30மணியளவில் இவர்கள் மடக்கிப் பிடிக்கப்பட்டனர்.

யாழ்மாவட்ட புலனாய்வு பிரிவு பெறுப்பதிகாரிக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, யாழ்மாவட்ட விஷேட குற்ற தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி பிரான்சிஸ் தலைமையில் யாழ்மாவட்ட புலனாய்வு பிரிவும், யாழ்மாவட்ட விஷேட குற்றத் தடுப்பு பிரிவும் இணைந்து நடத்திய சுற்றிவளைப்பில் 20 லீற்றர் கசிப்பு, 180லீற்றர் கோடா, கசிப்பு காய்ச்ச பயன்படுத்தப்படும் உபகரணங்கள் போன்றவையும் கைப்பற்றப்பட்டன.

கசிப்பு காய்ச்சிய 4 பேரும் கைது செய்யப்பட்டனர்.