கள்ளக் காதலனை இம்ரஸ் செய்ய பெற்ற பிள்ளையை அடித்து கொடுமைப்படுத்தி வீடியோ அனுப்பிய தா(பே)ய்

குழந்தையை கொடூரமாக தாக்கி, அந்த வீடியோவை கள்ளக்காதலன் மணிகண்டனுக்கு துளசி வாட்ஸ்அப்பில் அனுப்பி இருவரும் ரசித்ததும் தெரியவந்தது.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த மோட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் வடிவழகன் (26). இவரது மனைவி துளசி (23). இவர்களுக்கு கோகுல் (4), பிரதீப் (2) என இரு குழந்தைகள். இதில் பிரதீப்பை துளசி இரக்கமின்றி கொடூரமாக தாக்கிய வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து துளசியை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், புதுக்கோட்டை மாவட்டம் மச்சவாடி பாலன் நகரை சேர்ந்த கண்ணையா மகன் மணிகண்டன் என்ற பிரேம்குமார் (31) என்பவருடன் துளசிக்கு கள்ளக்காதல் ஏற்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து, அவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அதில், குழந்தையை கொடூரமாக தாக்கி, அந்த வீடியோவை மணிகண்டனுக்கு துளசி அனுப்பி, இருவரும் ரசித்ததும் தெரியவந்தது.

இதுதொடர்பாக போலீஸ் தரப்பில் கூறுகையில்;- வடிவழகனிடம் கோபித்துக்கொண்டு ஆந்திராவில் உள்ள தாய் வீட்டுக்கு குழந்தைகளுடன் துளசி சென்றதும், அங்கே போய் மனைவியிடமிருந்து செல்போனை வடிவழகன் பறித்து வந்துள்ளார். அதை பீரோவில் வைத்திருந்த வடிவழகன் கடந்த 28ம் தேதி எடுத்து ஆன் செய்து பார்த்தபோது குழந்தை பிரதீப்பை துளசி தாக்கும் நான்கு வீடியோக்களை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். அதை அவரது உறவினர்கள் சமூக வலைத்தளங்களில் பரப்பினர்.

இதுகுறித்து, வடிவழகன் அளித்த புகாரின் பேரில், சத்தியமங்கலம் போலீசார் வழக்குப் பதிந்து துளசியை கைது செய்து சிறையில் அடைந்தனர். மேலும் துளசி கொடுத்த அவரது காதலன் பிரேம்குமாரின் செல்போன் எண் மூலம் போலீசார் அவரை தேடி வந்தனர். இதனையடுத்து, அவரை அறந்தாங்கியில் வைத்து போலீசார் கைது செய்தனர். பின்னர், செஞ்சிக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

வடிவழகன், துளசி சென்னையில் இருந்தபோது அங்கிருந்தே போனில் மணிகண்டனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து போனிலேயே காதலை வளர்த்துள்ளனர். இந்நிலையில், முதல் மகன் உன்னை போல அழகாக இருப்பதாகவும், 2வது மகன் தந்தை போல இருப்பதால் தனக்கு பிடிக்கவில்லை என்று துளசியிடம் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.

இதனால், அக்குழந்தை மீது துளசிக்கு வெறுப்பு தொடங்கியது. ஒரு கட்டத்தில், நீ என்னுடன் வந்துவிடு, உன் கணவருக்கு வயது அதிகம், வயது குறைவான நீ எப்படி அவரை திருமணம் செய்து கொண்டாய் என்றும், உன்னை சந்தோஷமாக நான் பார்த்துக்கொள்வேன் என்றும் ஆசைவார்த்தைகளை மணிகண்டன் கூறியுள்ளார். அவரது ஆசைவார்த்தைகளை நம்பிய துளசி, தனது 2வது குழந்தையை அடித்து கொடுமைப்படுத்தும் வீடியோவை எடுத்து, கள்ளக்காதலனை மகிழ்ச்சிப்படுத்த வாட்ஸ்அப்பில் அனுப்பி வைத்தது தெரியவந்தது. மணிகண்டனிடம் கைப்பற்றப்பட்ட செல்போனில் குழந்தையை தாக்கும் 100க்கும் மேற்பட்ட வீடியோக்கள் இருந்துள்ளது. அதில் 4 மட்டுமே வெளியாகியுள்ளது தெரியவந்துள்ளது.Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை லைக் செய்து உங்கள் ஆதரவை தாருங்கள்.

Below Post Ad