நீர்வீழ்ச்சியில் உல்லாசமாக குளித்தவர்கள் இவர்கள் தான். (Photos)

இரத்தினபுரி மாவட்டத்தின் பலாங்கொடை, பெலிஹுல் ஓயா பகுதியில் அமைந்துள்ள பஹன் துடாவ நீர் வீழ்ச்சியை பின்னணியாக கொண்டு, அதன் அருகே ஆபாச காணொளியை தயார் செய்து இணையத்தில் பதிவேற்றிய சம்பவத்தில், குறித்த காட்சிகளில் தோன்றிய இளைஞன் மற்றும் யுவதி கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்த சி.ஐ.டி.யின் கணினி குற்ற விசாரணைப் பிரிவின் சிறப்புக்குழு அவர்களை நேற்று மாலை கைது செய்தனர். மஹரகமை பகுதியைச் சேர்ந்த 34 வயதான நபர் ஒருவரும் எல்பிட்டியவை சேர்ந்த தற்போது பன்னிப்பிட்டிய பகுதியில் தற்காலிகமாக வசிக்கும் 25 வயது யுவதியுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் இவர்கள் சற்று நாட்களுக்கு முன்பும் காட்டுக்குள் இருந்து இவ்வாறான வீடியோ வெளியிட்டுள்ளார்கள்.

இதனையே இவர்கள் இருவரும் தொழிலாக செய்து வந்துள்ளனர். இறுதியாக வெளியான வீடியோ பிரபலமடையவே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.Top Post Ad

Below Post Ad