புருஷன் என தெரியாமல் கள்ளக் காதலியை பார்க்க லிப்ட் கேட்ட காதலன்.

திருமணமான பெண்ணை முகநூலில் காதலித்து வந்த காதலன் அவரை பார்ப்பதற்காக குறித்த இளம்பெண்ணின் கணவனின் முச்சக்கர வண்டியிலேயே வீட்டிற்கு வந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் கொழும்பின் புறநகர் பகுதியொன்றில் அண்மையில் இடம்பெற்றுள்ளது.

மேலும் இச்சம்பவம் குறித்து தெரியவருவது,

தக்ஷிலா என்னும் இளம்பெண்ணுக்கு ஏற்கனவே திருமணம் முடிந்த நிலையில் சில மாதங்களிலேயே விவாகரத்து பெற்று வீட்டிலேயே இருந்தார்.

இதன்போது அடிக்கடி பெற்றோர்கள் குறித்த இளம்பெண்ணை மற்றொரு திருமணம் செய்து கொள்ளும்படி பலமுறை வற்புறுத்தியுள்ளார். இதனால் குறித்த இளம்பெண் திருமணமொன்று செய்யும் முடிவுக்கு வந்தார்.

இந்நிலையிலேயே கொழும்பிற்கு அண்மையில் வசிக்கும் டில்ருவன் பெரேரா முச்சக்கடி வண்டி ஓட்டுனராக தொழில்புரிந்து வந்தவரை திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் அவரது கணவன் காலையில் முச்சக்கர வண்டியை எடுத்து வேலைக்கு சென்றால் இரவு தான் மீண்டும் வீட்டிற்கு வருவார்.

தக்ஷிலா பொழுதுபோக்கு எதும் இல்லாமல் தனிமையாக இருந்த நிலையில் கணனியில் முகநூலில் கணக்கொன்றை ஆரம்பித்து நேரத்தை கழித்துவந்துள்ளார். தக்ஷிலா முகநூல் பக்கத்தில் அவருடைய அழகிய புகைப்படங்களை பதிவிட்டு வந்துள்ளார். மேலும் அவருடைய முகநூலில் கணக்கில் அவர் திருமணமான விடயத்தை பதிவிடாமல் பயன்படுத்தி வந்துள்ளார்.

அப்போது முகநூலில் இளைஞர் ஒருவரை தக்ஷிலாவுக்கு பிடிக்க தொடங்கியது, அதுவே நாளடைவில் காதலாகமாறியது. பின்னர் கணவர் வீட்டில் இல்லாத சமயத்தில் தக்ஷிலா தனது முகநூல் காதலுடன் சுதந்திரமாக பேச தொடங்கியுள்ளார்.

சில மாதங்களாக முகநூலில் பேசிக்கொண்டிருந்த இருந்த போது முகநூல் காதலன் உன்னை நேரில் சந்திக்க வருவதாக தெரிவித்துள்ளார். ஆனால் இதற்கு தக்ஷிலா தொடர்ந்து மறுப்பு தெரிவித்தார். ஒரு நாள் அவரே வீட்டில் கணவர் இல்லாத சமயத்தில் முகநூல் காதலனை அழைத்து பேசலாமென முடிவெடுத்து அழைத்துள்ளார்.

அப்போது வீட்டு முகவரியை அனுப்பி மதியம் வருமாறு முகநூல் காதலனிடம் தக்ஷிலா கூறியுள்ளார். காதலன் தக்ஷிலாவை பார்க்க மறுநாள் அவருடைய வீட்டிற்கு அருகிலிருந்த நகரத்தை வந்தடைந்த நிலையில் முச்சக்கர வண்டி ஒன்றை அணுகி குறித்த முகவரிக்கும் செல்லுமாறு சாரதியிடம் கூறியுள்ளார்.

இதேவேளை காதலன் அணுகிய முச்சக்கர வண்டியின் சாரதிதான் இளம்பெண்ணின் கணவன் என அவருக்கு தெரியாது. முகநூல் காதலனை முச்சக்கர வண்டியில் ஏற்றிக்கொண்டு புறப்பட்டார். வழியில் இளைஞனிடம் பேசிகொண்டே சென்றார்.

பின் வீட்டிற்கு சென்ற இருவரையும் ஒரே நேரத்தில் பார்த்து அதிர்ச்சியடைந்த இளம்பெண் என்ன செய்வதென்று தெரியாமல் வீட்டின் பின்வாசல் வழியாக அவரது தாயார் வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் இளம்பெண்ணின் கணவன் முகநூல் காதலனை எதுவும் செய்யாமல் முச்சக்கர வண்டியில் ஏற்றிச் சென்று நகரில் இறக்கி விட்டு மனைவியின் வீட்டுக்கு சென்றுள்ளார்.

கணவன் வந்ததை அறிந்த இளம்பெண் விபரீதம் எதோ உருவாகப் போவதாக நினைத்து அறைக்குள் சென்று கதவை பூட்டிகொண்டார். இதையடுத்து இளம்பெண்ணின் நடத்தையை பெற்றோரிடம் கணவன் தெரிவிக்க குறித்த இளம்பெண்ணை பெற்றோர் வெளியே அழைத்தனர். பின்னர் அவரின் நடத்தையை கடுமையாக கண்டித்தனர்.

முச்சக்கரவண்டியின் சாரதியிடம் பெற்றோர் மகள் சார்பில் மன்னிப்பு கோரினார். இந்நிலையில் முச்சக்கர வண்டி சாரதி இளம்பெண்ணிடம் இனிமேல் இது போன்ற எதையும் செய்ய மாட்டேன் என்று நீங்கள் உறுதியளிக்க வேண்டும். உங்கள் வாழ்நாள் முழுவதும் இனி முகநூலை பயன்படுத்த கூடாது அப்படி இருந்தால் என்னுடன் வாருங்கள் என அவர் தெரிவித்துள்ளார்.


Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad