யாழில் ஆமியை கண்டதும் பயந்து ஓடிய காவாலிகள்.

யாழ்.புத்துார் ஆவரங்கால் பகுதியில் வாள்வெட்டுக்கு தயாராகிக் கொண்டிருந்த ரவுடிகள் இராணுவத்தை கண்டதும் வாள்களை வீசிவிட்டு தப்பி ஓடியுள்ளனர்.

இச்சம்பவம் நேற்று மாலை ஆவரங்கால் வடக்கு பகுதியில் இடம்பெற்றிருக்கின்றது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

இரு குழுக்கள் மோதலுக்கு தயாராக இருப்பதாக ராணுவப் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து இராணுவத்தினர் குறித்த இடத்துக்கு சென்றுள்ளனர்.

இதன்போது 6 மோட்டார் சைக்கிள்களில் வன்முறைக்கு தயாராக இருந்த குழு இராணுவத்தை கண்டதும் வாள் மற்றும் கூரிய ஆயுதங்களை வீசிவிட்டு தப்பி ஓடியுள்ளது.

இந்நிலையில் தப்பி ஓடிய ரவுடிகளை கைது செய்வதற்கு இராணுவத்தினரும், அச்சுவேலி பொலிஸாரும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.


Tags

Top Post Ad

Below Post Ad

உங்கள் பிரதேச செய்திகளை +94 751651409 என்ற இலக்கத்திற்கு வாட்ஸாப் செய்யுங்கள். செய்திகளை உடனுக்குடன் பெற எமது முகநூல் பக்கத்தினை லைக் செய்யுங்கள்.