யாழ்.நாவற்குழியில் இன்று கொள்ளையர்கள் தாய், மகனை கட்டிவைத்து தாக்கி கொள்ளை..

யாழ்.நாவற்குழி பகுதியில் இன்று அதிகாலை வீடொன்றுக்குள் புகுந்த திருடர்கள் வீட்டிலிருந்த தாய் மற்றும் மகனை கட்டிவைத்து தாக்கிவிட்டு வீட்டிலிருந்த பொருட்கள் மற்றும் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். 

சம்பவத்தில் படுகாயமடைந்த தாயும், மகனும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். நாவற்குழி மேற்கு சித்தி விநாயகர் கோவிலடி பகுதியில் உள்ள வீடொன்றிற்குள் இன்று அதிகாலை புகுந்த திருடர்கள், 

வீட்டிலிருந்த தாயையும், மகனையும் கொடூரமாக தாக்கியுள்ளனர் திருடர்களின் தாக்குதலில் 17 வயதான மகனின் கை உடைந்துள்ளது 42 வயதான தாயின் தலையில் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. காயமடைந்த தாயும் மகனும் 

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள். குடும்பத் தலைவரை இழந்த அந்த குடும்பம் வறுமை நிலையில் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags

Top Post Ad

Below Post Ad

உங்கள் பிரதேச செய்திகளை +94 751651409 என்ற இலக்கத்திற்கு வாட்ஸாப் செய்யுங்கள். செய்திகளை உடனுக்குடன் பெற எமது முகநூல் பக்கத்தினை லைக் செய்யுங்கள்.