இனி லைசென்ஸ் எடுப்பதற்கு வருடத்தில் ஒருமுறையே பரீட்சை.

சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கான எழுத்து மூலப் பரீட்சைகள் பரீட்சைத் திணைக்களத்தினால் நடாத்த திட்டமிடப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

தமது திணைக்களத்தினால் நடத்தப்படும் எழுத்து மூலப் பரீட்சைகளுக்கு மேலதிகமாக, குறித்த எழுத்து மூலப் பரீட்சைகளை நடத்துவதற்கு பரீட்சைத் திணைக்களம் திட்டமிடப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் சுமித் அழககோன் தெரிவித்துள்ளார்.

அதன்படி, விண்ணப்பதாரர்கள் தங்கள் சொந்த பகுதியில் சாரதி அனுமதி பத்திரம் பெறுவதற்கான எழுத்து மூலப் பரீட்சையில் பங்கேற்க வாய்ப்பு உள்ளது.

பரீட்சைகள் திணைக்களத்தினால் வருடம் ஒருமுறை இந்த பரீட்சை நடத்தப்படும்.

17 வயதுக்கு மேற்பட்ட எவரும் பரீட்சைக்குத் தோற்ற முடியும், ஆனால் விண்ணப்பதாரர் 18 வயதை எட்டிய பின்னரே சாரதி அனுமதிப்பத்திரத்தைப் பெற முடியும்.