உலகில் எந்த ஒரு மூலைக்கும் 1 மணி நேரத்தில் செல்லலாம்: சீனாவின் மற்றுமொரு அதிரடி !

சீன விஞ்ஞானிகள் மணிக்கு 12,000 ஆயிரம் மைல் வேகத்தில் செல்லக் கூடிய, ஹைப்பர் சோனிக் விமானத்தை தயாரித்து சாதனை புரிந்துள்ளார்கள். இதனூடாக உலகில் எந்த ஒரு மூலை முடுக்கிற்கும் 1 மணி நேரத்தில் செல்ல முடியும். மிக மிக வேகமாக பயணிக்கும் இந்த ஹைப்பர் சோனிக் விமானம், பயணிகளை ஏற்றிச் செல்ல தான் பயன்படும் படும் என்று சீனா கூறுகிறது. ஆனால் அதில் அணு குண்டைக் கூட பொருத்த முடியும் என்பதும் யாவரும் அறிந்த உண்மை.