“உன்னால தாண்டி என் புருஷன் என்னை தொடமாட்றாண்டி” -கணவனின் கள்ளக்காதலி வீட்டுக்குள் புகுந்த மனைவி .

ஆந்திரப் பிரதேசத்தின் விஜயவாடாவில் உள்ள கிருஷ்ணா லங்கா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ராணிகரி தோட்டா பகுதியில் கரீஷ்மா என்ற பெண் தனியாக வசித்து வந்தார் .அந்த பெண்ணின் வீட்டருகே ஒரு கணவனும் மனைவியும் வசித்து வந்தனர் .இந்நிலையில் தனியாக வசித்த கரிஷ்மா மீது அந்த கணவனுக்கு ஆசை பிறந்தது .அதனால் அவரின் மனைவிக்கு தெரியாமல் அந்த கணவன் கரிஷ்மாவுக்கு வலை விரித்து அவரை தன் ஆசை நாயகியாக வைத்து கொண்டார் .அதனால் அந்த கணவன் அடிக்கடி கரிஷிமாவின் வீட்டுக்கு சென்று உல்லாசமாக இருந்து வந்தார் .

இந்நிலையில் அந்த மனைவிக்கு ஒரு நாள் கணவனின் கள்ள தொடர்பு பற்றி தெரிய வந்தது .அதனால் அவர் கணவனிடம் இது பற்றி கேட்டு அவரை கண்டித்தார் .ஆனால் அவர் கேட்டாலும் அந்த கரிஷ்மா அவரை விடாமல் அவருக்கு போன் செய்து வீட்டுக்கு கூப்பிட்டுள்ளார் .

இதனால் அந்த மனைவி கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த கரிஷ்மாவின் வீட்டுக்குள் நுழைந்து அங்குள்ள ஒரு அரிசி இடிக்கும் உரல் மூலம் அவரை கொலை செய்து விட்டு ஓடி விட்டார் .பின்னர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் அந்த பகுதி சிசிடிவி கேமிராவை ஆராய்ந்து பார்த்த போது, அந்த பெண் கரிஷ்மாவின் வீட்டுக்குள் செல்லும் காட்சி இருந்தது .அதை வைத்து போலீசார் அந்த பெண்ணை கொலை செய்த பெண்மணியை கைது செய்தனர் .