கதறி துடித்த மனைவி- குற்ற உணர்ச்சியில் கணவர் தூக்கிட்டு தற்கொலை

ஆத்திரத்தில் நான்கு மாத கர்ப்பிணி மனைவியின் வயிற்றில் எட்டி உதைத்தால் அவர் கதறி துடித்ததை கண்டு குற்ற உணர்ச்சியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார் கணவர்.

சென்னையில் ரெட்டை ஏரி பகுதியை சேர்ந்தவர் பாபு. இருபத்தி ஏழு வயதான அந்த இளைஞருக்கு எல்லம்மாள் என்ற மனைவி. எல்லம்மாள் நான்கு மாத கர்ப்பிணியாக இருந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பாக பாபுவுக்கும் எல்லம்மாளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு இருக்கிறது. இதில் இருவரும் வாக்குவாதம் செய்து இருக்கிறார்கள். வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த பாபு, மனைவியின் வயிற்றில் எட்டி உதைத்திருக்கிறார்.

நான்கு மாத கர்ப்பிணியாக இருந்ததால் பலம் கொண்டு வயிற்றில் எட்டி உதைத்ததால் வலி தாங்க முடியாமல் கதறி துடித்திருக்கிறார் எல்லம்மாள். இதை கண்டு குற்ற உணர்ச்சியில் நின்றிருக்கிறார் பாபு. கதறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து எல்லம்மாளை மீட்டு இராயபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். அங்கு சிகிச்சை பெற்று வரும் அவர் வலியால் துடித்துக் கொண்டிருக்கிறார்.

இதையடுத்து உறவினர்களும், அக்கம் பக்கத்தினரும் பாபுவை திட்டி தீர்த்திருக்கிறார்கள். சாதாரண பெண்ணின் வயிற்றில் உதைத்தாலே வலி தாங்க முடியாது . அதுவும் 4 மாத கர்ப்பிணியாக இருந்த பெண்ணை இப்படி உதைத்திருக்கிறாயே . அவ என்ன பாடு படுகிறாள் என்பது தெரியுமா? அதைப் பற்றியெல்லாம் உனக்கு தெரியாது என்று சொல்லி திட்டியிருக்கிறார்கள்.

மனைவி கதறி துடித்ததை கண்முன்னே பார்த்த குற்ற உணர்ச்சியில் இருந்த பாபு, எல்லோரும் இப்படி திட்டி தீர்த்ததும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறார். தனக்கு பிறக்கப்போகும் குழந்தையை சுமந்திருந்த மனைவியை இப்படி செய்துவி விட்டோமே என்ற குற்ற உணர்ச்சி இருந்தவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad