கமலா ஹாரிஸ் எதற்காக ப்ளூடூத் பயன்படுத்துவதில்லை….? வெளியான காரணம்….!!

அமெரிக்காவின் துணை அதிபராக இருக்கும் கமலா ஹாரிஷ், கடந்த வருடம் அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற ஜோ பைடனிற்கு வாழ்த்துக்களை தெரிவிக்கும் போது, ஒரு கையில் தன் மொபைலை வைத்திருந்தார். மேலும் சில நேரங்களில் அவர் வயர்டு ஹெட்போன்களை பயன்படுத்துகிறார்.

கமலா ஹாரிஸ், தொழில்நுட்பத்திலும் பாதுகாப்பு தொடர்பிலும் அதிக கவனத்துடன் செயல்படுகிறார். அவர் ப்ளூடூத் ஹெட் போன்களை உபயோகிக்காததற்கு என்ன காரணம்? என்ற கேள்வி எழுந்தது. தற்போது அதற்கு பதில் கிடைத்துள்ளது. அதாவது, ப்ளூடூத் இணைப்புகளை ஹேக் செய்ய வாய்ப்புகள் இருப்பதால், ஒருவரின் சாதனத்தை பிறரால் கட்டுப்படுத்த முடியும்.

மேலும், அந்த சாதனத்தில் இருக்கும் தகவல்களை அறிந்து கொள்ள முடியும். எனவே தேசிய பாதுகாப்பு அமைப்பு, கடவுச் சொற்களையும் பிற முக்கிய தகவல்களையும் பகிர ப்ளூடூத் ஹெட்போன்கள் உபயோகிக்க கூடாது என்று அறிவித்திருக்கிறது. எனவே, தான் கமலா ஹாரிஸ் எச்சரிக்கையாக வயர்டு ஹெட்போன் பயன்படுத்துகிறார்.

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad