பெண் உத்தியோகஸ்தரிடம் சில்மிசம்; சிக்கிய அதிகாரி

பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை தகாதமுறையில் துன்புறுத்திய குற்றச்சாட்டின் பேரில் கந்தரா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கு அமைய நேற்று இரவு இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாத்தறை பிரதேச சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தினால் அவர், கைது செய்யப்பட்டதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.