இந்திய தளபதியின் ஹெலிக்கு என்ன நடந்ததால் வெடித்தது ? இன்றுவரை விடை தெரியாத மர்மம் இவை தான்..

மறைந்த முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் சென்ற நவீன எம்.ஐ.,17 வி5 ஹெலிகாப்டர் விபத்தில் பல விடைத் தெரியாத கேள்விகள் உள்ளன. தொடர்ந்து நடக்கும் விசாரணையில் தான் அவை தீர்க்கப்படும் என தெரிகிறது. தலைமைத் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உள்ளிட்ட 14 பேர் சென்ற எம்.ஐ.,17 வி5 ஹெலிகாப்டர் இன்று (டிச., 08) நண்பகல் குன்னூர், காட்டேரி அருகே தரையிறங்குவதற்கு சில நிமிடங்கள் மட்டுமே இருந்த நிலையில் விபத்திற்குள்ளானது. அதில் 13 பேர் இறந்தனர். வெலிங்க்டன் ராணுவ கல்லூரி பணியாளர் ஒருவர் மட்டும் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதா அல்லது மேகமூட்டம் காரணமாக மரத்தில் மோதி தீப்பிடித்ததா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இச்சம்பவம் குறித்து விமானப் படை முன்னாள் அதிகாரிகள் சிலர் கூறுகையில், நாட்டின் முப்படைகளின் தலைமைத் தளபதி பயணிக்கிறார் என்பதால் ஹெலிகாப்டர் விரிவான சோதனைக்கு உட்படுத்தப்பட்டிருக்கும். மற்றொரு ஹெலிகாப்டரும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கும். வானிலை நிலைமை சரிபார்க்கப்பட்ட பின்னரே ஹெலிகாப்டரை எடுத்திருப்பார்கள். மோசமான வானிலை இருந்திருந்தால் பயணத்தை ரத்து செய்ய முயற்சித்திருக்கலாம்?

அப்படி இவை எல்லாமே சாதாரணமாக இருந்திருந்தால், ஹெலிகாப்டர் குன்னூருக்கு அருகில் மேகங்களுக்கிடையே தாழ்வாக பறந்த போது மலை மீது உள்ள உயரமான மரங்களில் மோதியிருக்கலாம். அந்த வான் வழியில் பழக்கப்பட்ட விமானி தான் ஹெலிகாப்டரை இயக்கினாரா என்பது தெரியவில்லை என்கின்றனர். எம்.ஐ.,17 வி5 வகை ஹெலிகாப்டர் நவீன ரக ராணுவ ஹெலிகாப்டர் ஆகும். உலகின் மேம்பட்ட ஹெலிகாப்டர்களில் இதுவும் ஒன்று. தற்போது விபத்துக்குள்ளானது ZP5164 சீரியல் எண் கொண்டது. பிரதமர் மோடி இதே ரகத்தில் ZP5238 சீரியல் எண் ஹெலிகாப்டர்களை பல்வேறு சந்தர்பங்களில் பயன்படுத்தியுள்ளார். கடந்த 2020 ஆகஸ்ட் மாதம் ராமர் கோயிலுக்கான பூமி பூஜை விழாவுக்கு இந்த ரக ஹெலிகாப்டரில் தான் அயோத்திக்கு வருகை தந்தார். அதே போல் இவ்வாண்டு ஏப்ரலில் மேற்கு வங்க தேர்தல் பிரசாரத்தின் போது கங்காராம்பூர், ஜெய்நகர் கூட்டங்களுக்கு இதே ரக ஹெலிகாப்டரில் பயணித்துள்ளார்.

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad