மற்றுமொரு விமான விபத்து ; விங் கமாண்டர் உயிரிழப்பு!

ராஜஸ்தானின் ஜெய்சல்மாரில், விமானப் படைக்கு சொந்தமான, ‘மிக் – 21’ ரக போர் விமானம் விழுந்து நொறுங்கியதில், ‘விங் கமாண்டர்’ ஹர்ஷித் சின்ஹா உயிரிழந்ததாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராஜஸ்தானின் ஜெய்சல்மாரில், நம் விமானப் படைக்கு சொந்தமான மிக் – 21 ரக போர் விமானம் நேற்று மாலை பயிற்சியில் ஈடுபட்டு இருந்தது. இதன்போது, பாலைவன தேசிய பூங்கா பகுதியில் நேற்றிரவு 8:30 மணியளவில் விமானம் விழுந்து நொறுங்கியது.

இதில் விமானத்தை இயக்கிய பைலட் விங் கமாண்டர் ஹர்ஷித் சின்ஹா சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த தகவலை விமானப் படை உறுதி செய்தது. இந்நிலையில் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

இதேவேளை கடந்த 1971 முதல் 2012 வரையிலான காலகட்டத்தில், ‘மிக்’ போர் விமானங்கள் 482 முறை விபத்துக்குள்ளாகி உள்ளன. இதில், 171 பைலட்கள், 39 பொது மக்கள் உள்ளிட்டோர் பலியாகி உள்ளனர்.

மேலும் இந்த ஆண்டில் மட்டும் மிக் – 21 ரக போர் விமானங்கள் ஏராளமான முறை விபத்துகளில் சிக்கியுள்ள நிலையில் இதை, ‘பறக்கும் சவப்பெட்டி’ என, விமானிகள் அழைக்கின்றனர்.

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad