கனடாவில் அதிகாலை இடம்பெற்ற தூப்பாக்கி சூடு! இளைஞனுக்கு நேர்ந்த நிலை

கனடாவின் மிகபெரிய நகரமான மொன்றியல் இன்று அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டிற்கு இலக்கான நிலையில் 19 வயதுடைய நபர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்ட்டுள்ளது.

குறித்த துப்பாக்கி சூடு சம்பவம் இன்றைய தினம் (24-12-2021) அதிகாலை 1.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

மேலும் இச்சம்பவத்தில் மொன்றியலை சேர்ந்த 19 -வயதுடைய நபர் துப்பாக்கி சூட்டிற்கு இலக்காகியுள்ளார்.

மொன்றியல் மவுண்ட் ரோயல் அபெர்டேல் சாலை மற்றும் ட்ரெண்டன் அவென்யூ சந்திப்புக்கு அண்மித்த பகுதியில் அமைத்திருந்த தனியாருக்கு சொந்தமான வீடொன்றில் நடைபெற்ற கொண்டாட்ட நிகழ்வில் இடம் பெற்ற வாக்குவாதத்தில் இந்த சூட்டு சம்பவம் இடம் பெற்றதாக காவல் துறையினர் தெரிவித்துளளனர்.

வெள்ளிக்கிழமை அதிகாலை 1.30 -மணியளவில் மொன்றியல் காவல் துறைக்கு தனியாருக்கு சொந்தமான வீடொன்றில் இருந்து துப்பாக்கி சூட்டு சத்தங்கள் கேட்பதாக கிடைத்த அழைப்பை அடுத்து இடம் சம்பவ இடத்துக்கு காவல் துறையினர் விரைந்து வந்தாக தெரிவிக்கபடுகிறது.

அதனை தொடர்ந்து அங்கு விரைந்த மொன்றியல் அவசர சேவை பிரிவு சம்பவ இடத்துக்கு வந்த போது பாதிக்கப்பட்ட 18 வயது இளைஞன் தரையில் மயங்கி கிடந்ததை அவதானிக்க முடிந்ததாகவும், இந்த இளைஞனின் உடலின் மேல் பாகத்தில் துப்பாக்கி ரவைகள் தாக்கியிருந்தாகவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞன் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கபடுகிறது.

இது தொடர்பாக சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை என்பதுடன் சம்பவ இடத்தில் உள்ள பல்வேறு சாட்சிகளிடம் இருந்து வாக்குமூலங்களை பொலிசார் சேகரித்து விசாரணையை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த வருடத்தில் 35 கொலை சம்பவங்கள் மொன்றியல் நடைபெற்றுள்ளதாக காவல் துறையினரின் அறிக்கையினை ஆதாரம் காட்டி செய்தி சேவைகள் செய்தி வெளியிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.