சுற்றுலா சென்ற இடத்தில் மோதல்; யாழ் இளைஞன் அடித்துக்கொலை

 

ஏற்பட்டிருந்த மோதலில் யாழை சேர்ந்த இளைஞன் அடித்து கொல்லப்பட்டதாக கூறப்படுகின்றது. குறித்த ளைளஞன் கிளிநொச்சி – பூநகரி கௌதாரிமுனை பகுதியில் இளைஞர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தொிவிக்கின்றன.

சம்பவத்தில் உயிரிழந்த இளைஞன் யாழ்.ஆனைக்கோட்டையை சேர்ந்தவர் என கூறப்படுகின்றது.

யாழ்ப்பாணத்திலிருந்து கௌதாரிமுனைக்கு சுற்றுலா சென்ற இடத்தில் காரைநகரில் இருந்தும் மற்றொரு குழு சுற்றுலா சென்றிருந்த நிலையில் இரு கோஸ்டிகளுக்குமிகிடையில் ஏற்பட்ட மோதலில் குறித்த இளஞர் உயிரிழந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ள பொலிஸார் சம்பவத்துடன் தொடர்புடைய பலரை கைது செய்துள்ளதாகவும் தொியவருகின்றது.