“இவங்கலாம் திருந்த மாட்டாங்க”…. நிதியை ஆட்டைய போட்ட நபர்கள்…. சுத்தி சுத்தி வேட்டையாடும் அதிகாரிகள்….!!

அமெரிக்க அரசாங்கம் கொரோனா கட்டுப்பாடுகளால் வேலையிழந்து சிக்கித்தவிக்கும் பொதுமக்களுக்கு பல லட்சம் கோடி ரூபாயை உதவித்தொகையாக கொடுப்பதற்கு ஒதுக்கியுள்ளது.

ஆனால் இந்த உதவித்தொகையை பெற தகுதியில்லாத பலருக்கும் பணம் வழங்கப்பட்டு சுமார் 71/2 கோடி ரூபாய் அளவிற்கு நிதி தொகையில் முறைகேடு நடந்துள்ளது.

இதனை கண்டறிந்த அமெரிக்க ரகசிய சேவை பிரிவினர்கள் இந்த நிதி மோசடி தொடர்பாக சுமார் 900 க்கும் மேலான குற்ற விசாரணையை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளார்கள்.

அதோடு மட்டுமின்றி இந்த நிதி மோசடி தொடர்பாக மாநிலம் வாரியாக நடத்தப்பட்ட ஆய்வில் தற்போது வரை சுமார் 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

மேலும் மேற்குறிப்பிட்டுள்ள இந்த நிதியை பெற தகுதியில்லாத பலரிடமிருந்து பணத்தை திரும்ப பெற்றுள்ளதாகவும் ரகசிய சேவை பிரிவினர்கள் தெரிவித்துள்ளார்கள்.