நடத்தையில் சந்தேகம் மனைவியின் கையை வெட்டி துண்டித்த கணவர்!

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கெங்குவார்பட்டி பகுதியை சேர்ந்தவர் சின்ன முத்து (45). தென்னை மரம் ஏறும் கூலித் தொழிலாளியான இவருக்கும் நாகஜோதி (40) என்பவருக்கும் 20 வருடங்களுக்கு முன்பு திருமணம் முடிந்து 3 மகன் மற்றும் மகள் உள்ளனர்.

இந்நிலையில் சின்னமுத்து அவரது மனைவி நாகஜோதி வேரு ஒரு நபருடன் தொடர்பில் இருப்பதாக நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து தேங்காய் வெட்டும் அரிவாளை கொண்டு மனைவியின் வலது கை மணிகட்டிற்கு கீழ் வேட்டியுள்ளார். இதனால் நாகஜோதியின் கை மணிகட்டிற்கு கீழ் துண்டாகியது.

இதனை தொடர்ந்து பக்கத்தில் இருந்தவர்கள் கை துண்டிக்கப்பட்ட நாகஜோதியை மீட்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதித்தனர். இச்சம்பவம் குறித்து தேவதானப்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கணவர் சின்னமுத்துவை கைது செய்துள்ளனர்.

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad