கள்ளக்காதலை கைவிட மறுத்த மனைவியை கொலை செய்த கணவன்

நெல்லை மாவட்டம் பணகுடி அண்ணாத்திகுளத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன். கூலி தொழிலாளி இவருக்கு திருமணமாகி மனைவி இறந்து விட்டதால் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு கணவனை இழந்த அமுதா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இருவரும் பணகுடி தனியார் செங்கள் சூளையில் வேலை செய்து வந்தனர். அப்போது அமுதாவிற்கு அங்கு வேலைசெய்யும் மற்றொரு நபருக்கும் தொடர்பு ஏற்பட்டதாக தெரிகிறது.

இதனை நேரில் கண்ட மாரியப்பன் அவருடன் உள்ள கள்ளத்தொடர்பை கைவிடுமாறு கூறி வந்துள்ளார். அதனை அமுதா கைவிட மறுத்ததாக தெரிகிறது. இந்நிலையில் இன்று காலை தன்னுடன் வேலைக்கு வருமாறு அண்ணத்திகுளம் அருகே உள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்ற மாரியப்பன், அமுதாவை தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சராமரியாக குத்தினார். இதில் அமுதா இரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். பின்பு மாரியப்பன் நேராக பணகுடி காவல் நிலையத்திற்கு சென்று சரணடைந்து தனது மனைவி அமுதாவை குத்தியதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பணகுடி போலீசார் விரைந்து சென்று இரத்த காயங்களுடன் கிடந்த அமுதாவை மீட்டு பணகுடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அமுதா பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக மாரியப்பன் மீது பணகடி போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad