பாகிஸ்தானின் மந்திரி சபையில், அறிவியல், தொழில்நுட்பத்தின் மந்திரியாக இருக்கும் ஷிப்லி பராஸ், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மாலையில் கைபர் பக்துங்வா என்னும் மாகாணத்தில் இருக்கும் கோட் மாவட்டத்தில் வாகனத்தில் சென்றிருக்கிறார். அந்த சமயத்தில், அங்கு வந்த மர்ம நபர்கள் திடீரென்று அவரின் வாகனத்தை வழி மறித்து சரமாரியாக துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர்.
இதில், நூலிழையில் மந்திரி, எந்தவித காயங்களும் இல்லாமல் உயிர் பிழைத்தார். எனினும் அவரின் ஓட்டுனர், பலத்த காயமடைந்திருக்கிறார். அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தற்போது அவருக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.