கனடா முதியோர் இல்லம் ஒன்று பெரும் சிக்கலில்: இருவர் மரணம்

கனடாவின் கியூபெக் மாகாண முதியோர் இல்லம் ஒன்றில் கொரோனா பெருந்தொற்று பரவல் அதிகரித்துள்ள நிலையில், சிகிச்சை பலனின்றி இருவர் மரணமடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கியூபெக் மாகாணத்தில் அமைந்துள்ள Saint-Hubert முதியோர் காப்பகத்திலேயே 100கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

டிசம்பர் 21 அல்லது 22ம் திகதி முதன்முதலில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது 59 முதியோர்களுக்கும் 39 ஊழியர்களுக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இருவர் மரணமடைந்துள்ளதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதனிடையே, காப்பகத்தில் கொரோனா பரவல் அச்சுறுத்தல் தகவல் வெளியானதை அடுத்து, முதியோர்களும் அவர்களின் குடும்பத்தினரும் அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

கொரோனா பரவல் கண்டறியப்பட்ட சில நாட்களிலேயே பலருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதும், கடந்த 24 மணி நேரத்தில் இருவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதும் எஞ்சியவர்களுக்கு பீதியை ஏற்படுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.

குறித்த காப்பகத்தில் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளார்களா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை என தெரிவித்துள்ள நிர்வாகிகள், கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள அனைவரும் ஒரு டோஸ் அல்லது முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளவர்கள் என்றே தெரிவித்துள்ளனர்.