பிரியந்த குமார கொலையுடன் தொடர்புடைய முக்கிய சந்தேக நபர் கைது!

ராவல்பிண்டி பகுதியில் முக்கிய சந்தேக நபர் ஒருவர் பஞ்சாப் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தானில் பிரியந்த குமார படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இம்தியாஸ் அலியா பில்லி கைது செய்யப்பட்டுள்ளார்.

பஞ்சாப் காவல்துறையின் கூற்றுப்படி, ராவல்பிண்டிக்குச் செல்லும் பஸ்ஸில் வைத்து அவர் கைது செய்யப்பட்டார். பிரியந்த குமாரவை அடித்துக் கொன்று அவரது உடலை எரித்த சம்பவத்தில் இவர் முதன்மையாக ஈடுபட்டதாகத் தெரியவந்துள்ளது.

இக்கொலை தொடர்பாக இதுவரை 130க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களில் 27 பேர் பிரதான சந்தேக நபர்களாவர். அவர்களில் 26 பேரை பாகிஸ்தானிலுள்ள குஜரன் வாலா தீவிரவாத தடுப்பு நீதிமன்றம் இம்மாதம் 21ஆம் திகதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது