“விடிய விடிய போன் பேசி ,சுடிதார் இல்லாம வீடியோ எடுத்து ….”புது டெக்னிக்கில் பெண்களை வீழ்த்திய வாலிபர்

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் நெடுங்கண்டம் தூக்குபாலத்தில் 22 வயதான ஆரோமல் என்ற வாலிபர் வசித்து வந்தார் .இவருக்கு வேலை இல்லாததால் வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் இளம்பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகளிடம் நட்பு ஏற்படுத்தி அரட்டை அடித்து வந்துள்ளார். பின்னர் அவர்களிடம் இரவு முழுவதும் சாட்டிங் செய்து மிகவும் நெருக்கமாகி உள்ளார்.

அதன் பிறகு அவரோடு தொடர்பில் இருந்த பல மாணவிகளின் போன் நம்பரை வாங்கி ,அவர்களுக்கு விடிய விடிய வீடியோ காலில் பேசுவார் .அப்போது அந்த மாணவிகளிடம் ஆபாசமாக நிற்க வைத்து படமெடுத்து ,அதை ரெக்கார்ட் செய்தார் .பின்னர் அந்த ஆபாச படங்களை அவர்களுக்கு அனுப்பி ,அவர்களை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் .இவரால் பாதிக்கப்பட்ட பல மாணவிகள் சமுதாயத்துக்கு பயந்து புகாரளிக்காமல் இருந்தனர் .
ஆனால் ஆரோமலால் பாதிக்கப்பட்ட 21 வயது கல்லூரி மாணவி ஒருவர், இடுக்கி போலீசில் துணிச்சலாக புகார் அளித்தார். இதை தொடர்ந்து விசாரணை நடத்திய போலீசார் ஆரோமலை கைது செய்தனர்.