பிரபல தொலைக்காட்சி ஒன்றில் “சூப்பர் சேலஞ்ச்’ மற்றும் “கிரேஸி கண்மணி’ நிகழ்ச்சிகளை கலகலப்பாகவும், ஜாலியாகவும் நடத்தி வரும் வி.ஜே. தியா மேனன் ( Vj Diya ). ஆரம்பத்தில் சன் மியூசிக்கில் வி.ஜே-வாக இருந்தார் தியா.
இப்போது, ரியாலிட்டி ஷோக்கள் மற்றும் திரைப்பட விழாக்களை தொகுத்து வழங்குதல் போன்ற வேலைகளையும் செய்து வருகிறார். இவருக்கு, கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
திருமணதிற்கு பிறகு சிங்கப்பூரில் செட்டிலாகி விடுவார் என்று பேசப்பட்டது. ஆனால், மீண்டும் ஆங்கரிங் தொழிலையே தொடர்ந்து செய்து வருகிறார்.
காதல் கணவனின் ஒத்துழைப்பால் முன்பை விட இப்போது மிகவும் இன்னும் உற்சாகமாக ஆங்கரிங் செய்ய முடிகிறது என்கிறார் தியா மேனன். பெரும்பாலும், புடவை சகிதமாகவும், மாடர்ன் உடையாக இருந்தாலும் துளியும் ஆபாசம் கலந்து விடாமலும் பார்த்துக்கொள்வார் தியா.
இன்ஸ்டாகிராமில் துருதுருவென இருக்கும் இவர் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
அந்த வகையில், தற்போது சிங்கப்பூரில் குட்டியான டெண்டுக்குள் கவர்ச்சி உடையில் கணவருடன் எடுத்துக்கொண்ட செல்ஃபி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அம்மணி.இதனை பார்த்த ரசிகர்கள் சிங்கிள்ஸ் சாபம் உங்களை சும்மா விடாது என்று கூறி வருகிறார்கள்.