2021-ல் உலக மக்களின் மனதில் ஆறாத வடுவாய்…. 5 மோசமான இயற்கை பேரழிவுகள்?!!!!

2021-ஆம் ஆண்டில் உலகை மிக மோசமாக பாதித்த 5 இயற்கை பேரழிவுகள் :-

 1. கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் கடந்த ஜூன் மாதம் மூச்சுத்திணற வைக்கும் அளவிற்கு ஏற்பட்ட கடும் வெப்ப அலை காரணமாக சுமார் 5 நாட்களில் 569 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் அங்கு வரலாறு காணாத அளவிற்கு வெப்பநிலை தாறுமாறாக உயர்ந்தது. இதனால் கனடாவில் உள்ள பிரதேசங்கள் மற்றும் மாகாணங்கள் ‘Heat dome’ என்றழைக்கப்பட்டது. அதன் பிறகு நிபுணர்கள் பலரும் வரலாறு காணாத இந்த கடும் வெப்ப நிலைக்கு முக்கிய காரணம் காலநிலை மாற்றம் என்று கூறியிருந்தனர்.
 2. ஜெர்மனி வெள்ளம் :-
 ஜெர்மனியில் கடந்த ஜூலை மாதம் 60 ஆண்டுகளில் இல்லாத விதமாக முதல் முறையாக தாழ்வான பகுதிகள் மற்றும் நகரங்களில் அழிவை ஏற்படுத்தும் வகையில் பயங்கர வெள்ளம் ஏற்பட்டது. இந்த பேரழிவில் சுமார் 170 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வெள்ள பாதிப்பு காரணமாக மின்சாரம் மற்றும் நீர் இல்லாமல் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அதோடு மட்டுமில்லாமல் தொலைத்தொடர்பு நெட்வொர்க்குகள் மற்றும் நகரங்களின் உள்கட்டமைப்பு உள்ளிட்டவையும் வெள்ளத்தால் மோசமாக பாதிக்கப்பட்டது. இந்த பாதிப்பை சரி செய்யவே கிட்டத்தட்ட பல வாரங்கள் ஆனது குறிப்பிடத்தக்கது ஆகும்.

3. இத்தாலி தீ :-

இத்தாலியின் தெற்கு பகுதியில் கடந்த ஆகஸ்ட் மாதம் வெப்பக் காற்றினால் ஏற்பட்ட தீயால் தெற்கு கலாப்ரியாவுடன் சிசிலி தலைநகரமும் தீப்பற்றி எரிந்தது. இதனால் அதிக அளவில் தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணியும் விறுவிறுப்பாக நடைபெற்றது. மேலும் ஐரோப்பாவில் வெப்பநிலை 42.8 டிகிரி செல்சியஸ் மற்றும் 119.8 பாரன்ஹீட் என்ற அளவிற்கு அதிகமாக உயர்ந்தது. வரலாற்றிலேயே இது மிக உயர்ந்த வெப்ப நிலையாக பார்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது ஆகும்.

4. கிரீஸை சூறையாடிய காட்டு தீ :-

கிரீஸ் நாட்டில் ஏற்பட்ட பயங்கர காட்டுத்தீயால் அந்நாடு மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டது. மேலும் சுமார் 580-க்கும் மேற்பட்ட இடங்களில் தீ வேகமாக பரவியதால் அந்நாட்டில் உள்ள 2-வது மிகப்பெரிய தீவான ஈவியா, இருந்த இடம் தெரியாமல் முற்றிலுமாக அழிந்து போனது. மேலும் உயிரிழப்புகளும் அதிக அளவில் ஏற்பட்டது. அதோடு மட்டுமில்லாமல் இயற்கை காடுகளின் மிகப்பெரிய பகுதி காட்டுத்தீ காரணமாக அழிக்கப்பட்டது வேதனையை ஏற்படுத்தும் விதமாகவே உள்ளது.

5. அமெரிக்க புயல் :-

கடந்த ஆகஸ்ட் மாதம் அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை பகுதியை சூறாவளி தாக்கியது. மேலும் அமெரிக்க கண்டத்தை ஆட்சி படைத்த இந்த சூறாவளி வலிமையான ஒன்றாக பதிவு செய்யப்பட்டது அதேபோல் சுமார் 45 பேர் இருந்த சூறாவளியின் போது பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் அதனைத் தொடர்ந்து Mississippi மாகாணம் முழுவதும் சுமார் லட்சக்கணக்கான வீடுகள் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் இருளில் மூழ்கின.

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad