“இருதலைவர்கள் பேச்சுவார்த்தை”…. உக்ரைன் பதற்றத்தை தணிக்கணும்…. வலியுறுத்திய பிரபல நாடு….!!!

அமெரிக்க அதிபரான ஜோ பைடன் ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதினுடன் தொலைபேசியில் சுமார் 50 நிமிடங்களுக்கு மேல் பேச்சுவார்த்தை மேற்கொண்டார். இந்த பேச்சுவார்த்தை பிற்பகல் 3. 35 மணிக்குத் தொடங்கி 4.25 வரை நீடித்ததாக வெள்ளை மாளிகை அதிகாரிகள் கூறியுள்ளனர். அதாவது உக்ரைன் எல்லையில் ரஷ்யா படைகளை திரட்டியதால் அங்கு நிலவும் பதற்றமான சூழல் தொடர்பாக இரு தலைவர்களும் ஆலோசனை மேற்கொண்டனர்.

இதனிடையில் பதற்றத்தைத் தணித்த நடவடிக்கை எடுக்குமாறு ஜோ பைடன் வலியுறுத்தி உள்ளார். வரும் புத்தாண்டு அன்று ரஷ்யா அமெரிக்கா இடையில் அரசு முறை பேச்சுவார்த்தைகள் தொடங்க உள்ளதை குறித்தும் இரு தலைவர்களும் விவாதித்ததாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. உக்ரைன் பதற்றத்தை தணித்த பின்புதான் இருதரப்பிலும் சுமுகமான பேச்சுவார்த்தைகளுக்கான சூழல் ஏற்படும் என்றும் ஜோ பைடன் வலியுறுத்தியுள்ளார். இரு தலைவர்களும் விரைவாக காணொளி மூலமாக கலந்து பேச உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad

எமது முகநூல் பக்கத்தினை லைக் செய்து உங்கள் ஆதரவை தாருங்கள்.