பாட்டியின் கள்ளக்காதலனால் மூன்று வயது பேத்திக்கு நேர்ந்த கொடுமை

அந்தப் பாட்டியின் கள்ளகாதலன் அவரின் மூன்று வயது பேத்தியை பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொன்று போட்டிருப்பான் என்று கொஞ்சம் கூட யாரும் நினைத்துப் பார்க்கவில்லை உத்திரப்பிரதேச மாநிலத்தில் தான் அரங்கேறியிருக்கிறது இந்த கொடூரம்.

அம்மாநிலத்தில் கௌதம புத்தா நகர் மாவட்டத்தின் நொய்டா நகரில் 55 வயது நீரஜ் சர்மா என்ற பெண் வசித்து வருகிறார். இவருடைய மகன் சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். அதனால் அவருடைய மனைவி தனியாக வசித்து வருகிறார்.

மகன் சிறையிலிருந்து வரும் வரைக்கும் குழந்தையை தான் வளர்ப்பதாக பாட்டி நீரஜ் வாக்கு கொடுத்து அதன்படி வளர்த்திருக்கிறார். இந்த நிலையில் நீரஜ் சர்மாவுக்கு புலந்த சாகர் மாவட்டத்தைச் சேர்ந்த ஹேமந்த் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. அவர் அடிக்கடி நீரஜ் வீட்டிற்கு வந்து சென்றிருக்கிறார்.

பாட்டியுடன் கள்ள உறவு வைத்திருந்த அவருக்கு மூன்று வயது பேத்தியின் மீதும் ஒரு கண் இருந்திக்கிறது. பாட்டி அசந்த நேரம் பார்த்து விளையாடிக் கொண்டிருந்த மூன்று வயது பேத்தியை தூக்கிக்கொண்டு சென்று புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தில் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து இருக்கிறார். இதில் சிறுமி உயிரிழந்த விட அங்கேயே போட்டு விட்டு தப்பி சென்றிருக்கிறார்.

கடந்த 24ஆம் தேதியன்று வீட்டு முன்பாக விளையாடிக்கொண்டிருந்த பேத்தியை காணவில்லை என்று போலீசில் புகார் அளித்திருக்கிறார் நீரஜ். நான்கு நாட்களுக்குப் பின்னர் இருபத்தி எட்டாம் தேதி அன்று புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டடத்தில் குழந்தையின் உடலை மீட்டிருக்கிறார்கள். அப்போது குழந்தையின் உடலில் காயங்கள் இருந்திருக்கின்றன.

மருத்துவ பரிசோதனையில் குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொலை செய்திப்பது உறுதியானது. இதையடுத்து கொலை மற்றும் ஆதாரங்களை மறைத்தல், போக்சோ உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து குற்றவாளியை தேடி வந்தனர். அப்போதுதான் ஹேமந்த் சிக்கியிருக்கிறார். அவரை பிடித்து போலீஸ் விசாரணை நடத்தியபோது, தான் செய்த குற்றத்தை ஒப்புக் கொண்டிருக்கிறார்.

இதன் பின்னர் சிறுமியின் இந்த கொலையில் பாட்டிக்கும் தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்தில் போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad