வடகொரியா, தொடர்ந்து அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருவதால் அமெரிக்கா அந்நாட்டு அதிகாரிகள் மீது பொருளாதாரத் தடை விதித்திருக்கிறது.
வடகொரியா, உலகநாடுகள் எதிர்த்தாலும், தொடர்ந்து அணு ஆயுத பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறது. கண்டம் தாண்டி கண்டம் பாயக்கூடிய ஏவுகணைகளையும் பரிசோதனை செய்து, பக்கத்து நாடுகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.
அதன்படி, கடந்த செவ்வாய்க்கிழமை அன்று ஹைபர்சோனிக் ஏவுகணையை வடகொரியா சோதனை செய்தது. அதனை அந்நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன் நேரில் பார்வையிட்டார். உலக நாடுகள் எச்சரித்தும், வடகொரியா அதனை கண்டுகொள்ளவில்லை.
எனவே, அதிபர் ஜோ பைடன், ஏவுகணை பரிசோதனை நடத்தியதில் தொடர்புடைய வட கொரியாவை சேர்ந்த மூத்த அதிகாரிகள் 5 பேர் மீது பொருளாதார தடை விதித்து உத்தரவிட்டிருக்கிறார்.