“பலான வீடியோவை மாணவியின் பெற்றோருக்கே அனுப்பி …”ஒரு வாத்தியார் பண்ண வேலைய பாருங்க

மத்திய பிரதேசத்தின் ஷியோபூர் பகுதியில் ஒரு அரசு துவக்கப்பள்ளி இயங்கி வருகிறது ,இந்த பள்ளியில் ஏராளமான மாணவிகளும் ,மாணவர்களும் கல்வி பயின்று வருகின்றனர் .அந்த பள்ளியில் பல ஆசிரியர்கள் ,மற்றும் ஆசிரியைகள் பணிபுரிகின்றனர் .மேலும் அந்த பள்ளியின் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களையும் ,ஆசிரியர்களையும் இணைத்து ஒரு வாட்ஸ் அப் க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது .அந்த க்ரூப்பில் தினமும் பள்ளி சம்பந்தப்பட்ட வீடியோக்களையும் ,மாணவர்களின் மதிப்பெண் போன்றவற்றையும் வெளியிடுவார்கள்.

இந்நிலையில் அந்த பள்ளியின் ஆசிரியர் இன்சாப் முகமது என்பவர் ,அந்த மாணவர், பெற்றோர், ஆசிரியர்களுக்கான ‘வாட்ஸ் ஆப்’ குழுவில் நேற்று முன்தினம் ஆபாச படங்கள் வெளியிட்டுள்ளார் ,அதை பார்த்த பல மாணவ மாணவிகளின் பெற்றோர் கொதிப்படைந்தனர் .அதனால் அவர்கள் உடனே பள்ளி தலைமை ஆசிரியரை தொடர்பு கொண்டு இந்த ஆபாச வீடியோ பற்றி புகார் கூறினர்.உடனே அந்த வீடியோவை பார்த்த அந்த பள்ளியின் ஹெட்மாஸ்டர் அந்த ஆசிரியரை அழைத்து விசாரணை மேற்கொண்டார் .அப்போது அவர் இந்த தகாத செயல் செய்தது ஊர்ஜிதமானது ,இதையடுத்து ஆசிரியர் இன்சாப் முகமது ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டு உள்ளார்..

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad