முல்லை தாதியின் கண்களில் திரவத்தை ஊற்றி காட்டில் வைத்து தாக்கும் அளவு என்ன விடையம் நடந்தது ?

முல்லைத்தீவு வைத்தியசாலை பெண் ஊழியருக்கு காட்டுப்பகுதியில் வைத்து நடாத்தப்பட்ட கொடூரச் செயல் , ஒன்றைப் பற்றி அதிர்வு இணையம் அறிந்துள்ளது. இந்த படத்தில் உள்ள தாதியே இவ்வாறு பாதிக்கப்பட்டவர் ஆவார். முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் சிற்றூழியராக கடமையாற்றும் பெண் ஊழியர் ஒருவர் மீது ஒட்டுசுட்டான் மாங்குளம் வீதியில் காட்டுப்பகுதியில் வைத்து தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு ஊழியர் மீது எதோ ஒரு திரவத்தை வீசி தாக்குதல் மேற்கொண்ட நிலையில் கண்கள் பாதிக்கப்பட்ட நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். அவர் கொண்டு சென்ற பர்சில் பணம் இருந்துள்ளது, அதனை அவர்கள் எடுக்கவில்லை. நகைகளை திருடவும் இல்லை. என்பது குறிப்பிடத்தக்க விடையம் ஆகும். இந்த ….

இந்த சம்பவம் தூர பிரதேசங்களில் இருந்து வனப்பகுதிகளை கடந்து பணிக்கு வரும் ஊழியர்களை கடும் அச்சத்தில் உள்ளார்கள். இதனால் கண்கள் பாதிக்கப்பட்ட குறித்த ஊழியர் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் செல்ல முடியாத நிலையில் அருகில் இருந்த ஒரு பொதுக் கிணற்றில் சென்று முகத்தை கழுவிய போதும் கண்ணில் பார்வை சீராகாத நிலையில் குறித்த பகுதியில் இருந்த ஒரு வீட்டில் தஞ்சம் அடைந்து அங்கிருந்து அவசர தொலைபேசி ஊடாக நோயாளர் காவுவண்டியை அழைத்து மாவட்ட வைத்தியசாலைக்கு, சென்றுள்ளார் என அதிர்வு இணையம் மேலும் அறிகிறது. இந்நிலையில் அவருடைய கண்களில் பார்வை பிரச்சினை ஆகியுள்ள நிலையில் என்ன திரவம் வீசப்பட்டுள்ளது என்பது தொடர்பில் அவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறான பின்னணியில் குறிப்பாக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் மாங்குளம் மல்லாவி துணுக்காய் உள்ளிட்ட பல்வேறு பிரதேசங்களில் இருந்தும் சுமார் 20 வரையான ஊழியர்கள் குறிப்பாக பெண் ஊழியர்கள் குறித்த பகுதிகளை கடந்து வனப்பகுதி ஊடாக பல்வேறு அச்சத்துக்கு மத்தியிலும் காட்டு யானைகள் அச்சுறுத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியிலும் வைத்தியசாலையில் கடமையாற்ற வருகை தந்து கொண்டிருக்கின்ற போது இவ்வாறான ஒரு தாக்குதலை எதிர்கொண்டுள்ளமை ஆனது மேலும் அச்சத்தை உண்டுபண்ணியுள்ளதாக பணியாளர்கள் தெரிவிக்கின்றனர். இதன் பின்னணி என்ன என்று தெரியவில்லை.அதுவரை அதிர்வு இணைய செய்திகளோடு இணைந்திருங்கள்.

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை லைக் செய்து உங்கள் ஆதரவை தாருங்கள்.

Below Post Ad