என்ன கொடுமை…? மெக்கானிக்கின் ஆண் உறுப்பை வெட்டி…. ஆசிரியர் செய்த கொடூரம்….!!!!

ஜெர்மனியில் உள்ள பெர்லின் நகரத்தில் கடந்த 2020 ஆம் வருடத்தில் மெக்கானிக் ஒருவர் காணாமல் போனார். காவல்துறையினர் அவரை தீவிரமாக தேடி வந்தனர். அந்த சமயத்தில் வனப்பகுதியில் இடுப்பு எலும்பு கண்டறியப்பட்டது. அது தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டதில், நர மாமிசத்தை உண்ணும் ஆசிரியர் ஒருவரால் மெக்கானிக் கொலை செய்யப்பட்டதாகவும் அவரின் பிறப்புறுப்பு துண்டிக்கப்பட்டிருப்பதாகவும் தெரியவந்தது.

அதாவது, பெர்லின் நகரில் Stefan என்ற 42 வயதுடைய ஆசிரியருக்கு, டேட்டிங் ஆப் மூலமாக மெக்கானிக் அறிமுகமாகியிருக்கிறார். இருவரும் ஓரினச்சேர்க்கையாளர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இருவரும் நேரில் சந்திக்க விரும்பி, மெக்கானிக், ஆசிரியரின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

அப்போது, மெக்கானிக்கின் சாப்பாட்டில் மயக்க மருந்தை கலந்து கொடுத்த ஆசிரியர், அவரை வெட்டிக்கொலை செய்து உடலை துண்டுகளாக்கி வனப்பகுதியில் வீசி விட்டார். அந்த ஆசிரியர் நரமாமிசம் உண்ணும் பழக்கம் கொண்டவர் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், அவர் மெக்கானிக்கின் பிறப்புறுப்பை வெட்டி, உண்டதாக காவல்துறையினரின் விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

அதன் பிறகு, நீதிமன்றத்தில் ஆசிரியர் ஆஜர்ப்படுத்தப்பட்டார். நீதிபதி வழங்கிய தீர்ப்பில், தன் 30 வருட கால அனுபவத்தில் இது போன்ற ஒரு வழக்கை சந்தித்ததில்லை என்று கூறி அதிர்ந்து போனார். அதே சமயத்தில் நீதிபதி தீர்ப்பு அளித்த போதும், அந்த ஆசிரியர் சிறிதும் பரபரப்பு இல்லாமல் எந்தவித குற்றவுணர்வும் இல்லாமல் அமைதியாக இருந்துள்ளார். இந்த வழக்கு நாடு முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.