உக்ரைன்- ரஷ்யா எல்லை பதற்றம்…. மூன்று நாட்டு ஜனாதிபதிகள்…. சுற்றுப்பயணத்தில் பிரபல நாட்டு அதிகாரி….!!

உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்க திட்டமிட்டுள்ளது. இதனால் ரஷ்யா தனது படைகளை உக்ரைன் நாட்டின் எல்லைக்குள் குவித்துள்ளதால் அங்கு போர் பதற்றம் நிலவி வருகிறது. இதனை தொடர்ந்து ரஷ்யா உக்ரைன் மீது படையெடுக்க திட்டமிடவில்லை என தொடர்ந்து கூறி வருகிறது. ஆனாலும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இதனை மறுத்து வருகின்றனர். இந்நிலையில் நோட்டா படைகள் உக்ரனுக்கு ஆதரவு அளித்து வருவதால் தற்பொழுது அங்கும் போர் பதற்றம் அதிகரித்து உள்ளது. இதனை தொடர்ந்து அமெரிக்காவின் பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின் இன்று விமானம் மூலம் போலந்துக்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் உக்ரைன் நாட்டுடன் தனது எல்லையை பகிர்ந்து கொண்டிருக்கும் நாடுகளான பெல்ஜியம், போலந்து மற்றும் லித்துவேனியா ஆகிய 3 நாடுகளுக்கு லாயிட் ஆஸ்டின் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த சுற்றுப்பயணத்தின் போது 3 நாடுகளின் ஜனாதிபதிகள் மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர்களை அவர் சந்தித்து பேச உள்ளார். இந்நிலையில் பெல்ஜியம் சுற்றுப்பயணத்தை முடித்து தற்போது போலந்து நாட்டிற்கு லாயிட் ஆஸ்டின் சென்றுள்ளார். லாயிட் ஆஸ்டின் போலந்து நாட்டின் ஜனாதிபதி அண்ட்ரெஜ் டூடா மற்றும் பாதுகாப்புத்துறை மந்திரி மரியுஸ் பிளாசாக் ஆகியோரை சந்தித்து பேச உள்ளார்.

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad