இதுவரை காட்டாத உச்ச கட்ட கவர்ச்சி காட்டிய சின்னத்திரை நயன்தாரா வாணி போஜன்..!

நடிகை வாணி போஜன் ( Vani Bhojan ) விக்ரம் அவரது மகன் துருவ் விக்ரம் நடித்து சமீபத்தில் ஓடிடியில் வெளியான படம் மகான். கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய இந்த படத்தில் சிம்ரன், பாபி சிம்ஹா, வாணி போஜன் நடித்திருந்தார்கள். ஆனால் படத்தில் வாணி போஜன் நடித்த காட்கள் எதுவும் இடம்பெறவில்லை.

இதுகுறித்து வாணிபோஜன் ரசிகர்கள் கடும் அதிருப்தி தெரிவித்து வந்தனர்.இதுகுறித்து இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் கூறியிருப்பதாவது: கதைப்படி சிம்ரனை விக்ரம் பிரிந்த பின்னர் வாணி போஜனுடன் அவருக்கு காதல் ஏற்படுகிறது. அவருடன் வாழ்கிறார் என்பது மாதிரியாக கதை எழுதப்பட்டது.

இதற்காக வாணி போஜன் ஒப்பந்தம் செய்யப்பட்டு நடித்தார். சில காட்சிகள் நடித்த நிலையில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை காரணமாக திட்டமிட்ட பல காட்சிகள் படமாக்க முடியவில்லை. குறிப்பாக வாணி போஜன் தொடர்பான காட்சிகள் படமாக்கப்படாததால் முழுமை பெறாமல் இருந்தது.

அதனால் அவரின் காட்சிகள் நீக்கப்பட்டன. இதுப்பற்றி அவரிடம் எடுத்து சொன்னோம். அவரும் பெருந்தன்மையாக ஏற்றுக் கொண்டார். அவருக்கு நன்றி” என்றார்.

மாயா, ஆஹா, தெய்வமகள், லட்சுமி வந்தாச்சு ஆகிய சீரியல்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் மனம் கவர்ந்தவர் வாணிபோஜன் அசோக் செல்வன், ரித்விகா சிங், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்த ஓ மை கடவுளே படம் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார்.

இந்த படத்தில் வாணிபோஜனுக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து வைபவ்விற்கு ஜோடியாக லாக்கப் உள்ளிட்ட அடுத்தடுத்த படங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தது.

விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாகவும், ஆதவ் கண்ணதாசனின் படத்திலும் நடிக்க வாணி போஜனை ஒப்பந்தம் செய்துள்ளனர். மேலும் சூர்யா தயாரிப்பில் உருவாக உள்ள படத்திலும், பிக்பாஸ் ரம்யா பாண்டியனுடன் சேர்ந்து நடிக்க உள்ளார்.

சின்னத்திரை நயன்தாரா என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் இவர், தற்போது மிதமான மேக்அப் போட்டு… சல்வாரில் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் ரசிகர்களால் தாறுமாறாக பார்க்கப்பட்டு வருகிறது.