நடுவானில் பதற்றம்… பயணியின் விபரீத செயல்…. அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்…!!!

அமெரிக்காவில் இருக்கும் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்திலிருந்து, 1775 என்ற பயணிகள் விமானம் வாஷிங்டன் நகரை நோக்கி சென்றுள்ளது. அப்போது, நடு வானில் ஒரு பயணி திடீரென்று விமானத்தின் கதவுகளை திறக்க முயற்சித்தார். எனவே, விமான ஊழியர்கள் உடனடியாக அந்த நபரை கட்டுப்படுத்தி அமர வைத்தனர்.

அதன்பிறகு, கன்சாஸ் நகரத்தில் இருக்கும் விமான நிலையத்தில் விமானம் தரையிறக்கப்பட்டது. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்திலிருந்து புறப்பட்டு சென்ற மூன்று மணி நேரங்களில் விமானம் தரையிறக்கப்பட்டது, பயணிகளுக்கு கடும் சிரமத்தை ஏற்படுத்தியது. விமான பணியாளர்கள் வேகமாக செயல்பட்டதால் பயணிகளை பாதுகாப்பாக தரையிறக்க முடிந்தது என்று அமெரிக்க விமான நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

இது பற்றி, அந்த விமானத்தில் இருந்த ஒரு பயணி கூறுகையில், திடீரென்று, சிலர் அவசரமாக முதல் வகுப்பை நோக்கி ஓடினார்கள். இதனால், பயணிகள் பயந்துவிட்டனர். எனினும், சிறுது நேரத்தில் விமானம் கன்சாஸ் நகரத்தில் தரையிறங்கியது என்று கூறியுள்ளார்.

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad