உக்கிரைன் மீது ஷெல் மழை பொழிகிறது: “”Z”” என்ற இலக்க குறியீடுகளோடு நகரும் ரஷ்ய டாங்கிகள்- போர் ஆரம்பமா ?

 

2ம் இணைப்பு : சற்று முன்னர் கிடைத்த தகவல்: (18:40 PM : Sunday) ::::::::::::::::::::சற்று முன் கிடைத்த ருயிட்டர்ஸ் தகவல் படி, உக்கிரைன் ராணுவமும் தொடர்ந்து ஷெல் தாக்குதலை ஆரம்பித்துள்ளதாக அறியப்படுகிறது. ரஷ்யாவின் நடப்பு நாடான பெலரூசில் இருந்து பெரும் படை ஒன்று புறப்பட்டு உக்கிரைன் எல்லையை நோக்கி நகர்கிறது. அதே நேரம் ஷெபிக்-கினோ பகுதியை நோக்கி Z எனக் குறியீடு இடப்பட்ட ரஷ்ய டாங்கிப் படைகள் நெருகுகிறது.

1ம் இணைப்பு

சில தினங்களுக்கு முன்னர் ரஷ்யா தனது டாங்கிகளை, ரயிலில் ஏற்றிக் கொண்டு செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகி இருந்தது. இதனை அடுத்து போரில் இருந்து ரஷ்யா பின் வாங்கி விட்டதாக பரவலாக நம்பப் பட்டது. ஆனால் அமெரிக்கா மட்டுமே ரஷ்யா தாக்குதல் நடத்தும் என்று தொடர்ந்து கூறி வந்தது. இன் நிலையில், தனது டாங்கிகளை கிழக்கு பக்கமாக , திசை திருப்பி. மேலும் அனைத்து ரஷ்ய டாங்கிகளிலும் Z என்ற குறியீட்டைப் போடு, அதனை கிழக்கு உக்கிரைன் எல்லை நோக்கிச் செல்லுமாறு புட்டின் பணித்துள்ள அதேவேளை. அந்தப் பகுதில் உள்ள உக்கிரைன் எல்லைக்கு உள்ளே வந்து விழும் வகையில், ஷெல் தாக்குதல் ஆரம்பமாகியுள்ளது. மழை போல் ஷெல் அடிக்கப்படுகிறது என்றும்…. Source : MOD:  Putin ‘orders Ukraine invasion’: Intelligence sources claim Russian troops ‘are making final battle plans’ as armoured tanks painted with a letter ‘Z’ head to border and eastern region is rocked by shelling

அந்த இடமே அதிர்ந்து கொண்டு இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. ஷெல் மூலம் குறித்த ஒரு பகுதியை கிளியர் செய்து விட்டு அதனூடாக ரஷ்ய டாங்கிகள் நுளையும் என்று எதிர்பார்கப்படுகிறது. இது உண்மையில் ரஷ்யாவின் போர் பலத்தை காட்டும் ஒரு நிகழ்வு தான். ஏன் எனில் மேலை நாடுகள் பல ஆயுத தளபாடங்களை அள்ளி வழங்கியுள்ளது. மேலும் சொல்லப் போனல் உக்கிரைனிடம் 2 லட்சத்தி 50, 000 படைகள் உள்ளார்கள். 9 லட்சம் துணைப் படை இருக்கிறது. 13,000 ஆயிரம் டாங்கிகள் உள்ளது. தற்போது அமெரிக்கா கொடுத்துள்ள மேலதிக ஆயுதங்கள் உள்ளது. இவை அனைத்தையும் ரஷ்யா சமாளிக்குமா ? போர் ஒன்றை ஒரு சிறிய முனையில், ஆரம்பித்துள்ளது ரஷ்யா என்று கூறப்படுகிறது. மேலதிக செய்திகள் விரைவில் வெளியாகும். அதுவரை அதிர்வு இணைய செய்திகளோடு இணைந்திருங்கள்.

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad