பல நாடுகளின் வெளியுறவு மந்திரிகளை சந்தித்த ஜெய்சங்கர்… வெளியான தகவல்…!!!

மத்திய வெளியுறவுத்துறை மந்திரியான ஜெய்சங்கர் முனிச் பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொள்வதற்காக கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஜெர்மன் நாட்டிற்கு சென்றிருக்கிறார். இதனிடையே ஜெய்சங்கர் பல நாடுகளைச் சேர்ந்த வெளியுறவு மந்திரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்.

அதன்படி, அவர் ஜெர்மன் நாட்டின் வெளியுறவு மந்திரியான அன்னலேனா பாயர்போக்கையுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இரு நாட்டு உறவுகளை பலப்படுத்துவது தொடர்பில் இருவரும் பேசியிருக்கிறார்கள். மேலும், உலக நாடுகளிடையே அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் உக்ரைன் நாட்டின் நிலை மற்றும் ஆப்கானிஸ்தான் நாட்டின் பிரச்சினைகள் தொடர்பில் ஆலோசனை செய்திருக்கிறார்கள்.

மேலும், ஜெர்மனியின் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு துறை மந்திரியான ஸ்வென்ஜா ஷூல்ஸையும் சந்தித்து பேசியிருக்கிறார். இதுபற்றி அவர் தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, நாங்கள் தனித்துவமான வளர்ச்சி கூட்டாண்மை குறித்து ஆலோசனை செய்தோம். சுத்தமான தொழில் நுட்பத்தையும், பசுமை வளர்ச்சியையும் முன்னேற்றுவதற்கான உறுதிப்பாடு தொடர்பில் தகவல்களை பகிர்ந்தோம் என்று கூறியிருக்கிறார்.

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad

எமது முகநூல் பக்கத்தினை லைக் செய்து உங்கள் ஆதரவை தாருங்கள்.