கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் பங்காருபேட்டை தாலுகா காமசமுத்திரம் கிராமத்தில் ஒரு 9ம் வகுப்பில் படிக்கும் மாணவி தனது பெற்றோருடன் வசித்து வருகிறார் . இ்ந்த நிலையில் நேற்று முன்தினம் அந்த சிறுமிக்கு பிறந்தநாள் ஆகும். இதையடுத்து அந்த சிறுமி தனது பிறந்தநாளை கொண்டாடினார்.
அவரின் பிறந்த நாளுக்கு அவரின் தந்தை புத்தாடை வாங்கி கொடுக்கவில்லை என்று, கோபித்துக்கொண்டு நேற்று முன்தினம் வீட்டிலிருந்து வெளியேறினார்.
இதையறிந்த அவரது நண்பர் ஒருவர், ‘பிறந்த நாளுக்கு பரிசு வாங்கி தருகிறேன் வா’ என்று கூறி அழைத்து சென்றுள்ளார். அவர், தனது மூன்று நண்பர்களை வரவழைத்து, சிறுமியை காமசமுத்திரம் வனப்பகுதிக்கு துாக்கி சென்று,நால்வரும் கூட்டாக கற்பழித்துள்ளனர். பிறகு அவரை வனப்பகுதியிலேயே விட்டு விட்டு, நால்வரும் தப்பியோடிவிட்டனர். பிறகு மயக்கத்தில் இருந்த சிறுமி, நேற்று காலை எழுந்து, தனக்கு ஏற்பட்ட சம்பவத்தை நினைத்து கதறி அழுதுள்ளார்.பிறகு சுதாரித்து கொண்டு, வனப்பகுதியிலிருந்து வீட்டுக்கு நடந்து வந்து, பெற்றோரிடம் நடந்த சம்பவத்தை கூறியுள்ளார்
அதையடுத்து அந்த சிறுமியை அவளது பெற்றோர் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனா். .பின்னர் இதுபற்றி சிறுமியின் பெற்றோர் காமசமுத்திரம் போலீசில் புகார் செய்தனர்.
போலீசார் வழக்கு பதிந்து நடத்திய விசாரணையில் சிறுமியை பலாத்காரம் செய்த அதே பகுதியை சேர்ந்த அனந்தகுமார், காந்தராஜ், பிரவீன் மற்றும் வேணு ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.