ரியூசன் விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த 17 வயது மாணவியை கடத்திய காவாலிகள்.

மத்துகம பிரதேசத்தில் தனியார் வகுப்பில் இருந்து தாயாருடன் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த 17 வயது மாணவியை, காதலன் எனக்கூறிய இளைஞன் கடத்திச் சென்றுள்ளார்.இது குறித்து மத்துகம பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த மாணவி ஹொரண பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்று வருகின்றார்.

இந்த நிலையில் தனது 44 வயதுடைய தாயுடன் மத்துகம பிரதேசத்தில் உள்ள தனியார் வகுப்பில் இருந்து வந்து கொண்டிருந்த போது சந்தேக நபர் மற்றுமொரு நபருடன் முச்சக்கரவண்டியில் வந்துள்ளதாக தாயார் தெரிவித்துள்ளார்.சந்தேக நபர் மகளின் கையை இழுத்து முச்சக்கரவண்டியில் ஏற்றிச் கடத்தி சென்றதாக தாயார் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது பிள்ளையின் தாயும் முச்சக்கரவண்டியில் ஏற முற்பட்டதாகவும், சந்தேகநபர் அவரை தாக்கி உதைத்துவிட்டு ஓடிவிட்டதாகவும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.சந்தேக நபர் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட முச்சக்கர வண்டியும் அடையாளம் காணப்பட்டுள்ளது. அத்துடன், சந்தேகநபர் மற்றும் கடத்தப்பட்ட யுவதியை கண்டுபிடிக்க பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மத்துகம தலைமையக குற்றப்பிரிவு அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை லைக் செய்து உங்கள் ஆதரவை தாருங்கள்.

Below Post Ad