மாணவி போல் சீருடை அணிந்து ஆபா ச காணொளி எடுத்த ஜோடி கைது.

பாடசாலை மாணவியை போல் நடித்து ஆபாச காட்சிகளை காணொளியாக பதிவு செய்து இணையத்தளத்தில் பதிவேற்றி பணம் சம்பாதித்த ஆண் மற்றும் பெண்ணை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

28 வயதான பெண்ணும், 29 வயதான ஆணுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சட்டரீதியாக பதிவு திருமணம் செய்துக்கொண்டுள்ளவர்கள், திருமணத்தை அடுத்த வருடம் நடத்தவிருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள இருவரும் பட்டதாரிகள் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

பணத்தை சம்பாதிக்கும் நோக்கத்தில் இவர்கள் ஆபாச காணொளிகளை தயாரித்து இணையத்தளத்தில் பதிவேற்றி வந்துள்ளனர். இதன் மூலம் இவர்கள் மாதாந்தம் சுமார் ஒரு லட்சம் ரூபாவை வருமானத்தை பெற்று வந்துள்ளனர்.

கைது செய்யப்படும் போது அவர்களிடம் இருந்து ஆபாச காணொளிகளை தயாரிக்க பயன்படுத்தப்படும் உபகரணங்கள், கணனி என்பவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

மேலும் படப்பிடிப்புக்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் பாடசாலை சீருடை, கழுத்து பட்டி ஆகியவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

சந்தேக நபர்கள் நீண்டகாலமாக இந்த செயலில் ஈடுபட்டு வந்துள்ளதுடன் இவர்கள் உருவாக்கியுள்ள இணையத்தள கணக்கில் 4 ஆயிரத்து 400 சப்ஸ்கிரைபர்கள் இருப்பதுடன் 8.7 மில்லியன் பேர் இவர்களின் காணொளிகளை பார்த்திருப்பதாகவும் தெரியவந்துள்ளது.


Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad