முல்லைத்தீவில் மாணவர்களுடன் இணைந்து மாணவிகளை துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர் கைது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் பாடசாலை மாணவிகள் பலர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் ஆசிரியர் ஒருவரும் மாணவர் ஒருவரும் எதிர்வரும் 30 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதோடு ஐந்து மாணவர்களுக்கு நீதிமன்றில் பிணை வழங்கப்பட்டுள்ளதோடு மேலும் பலரை தேடி பொலிசார் மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கற்பிக்கின்ற ஆசிரியர் மற்றும் மாணவர்கள் இணைந்து பல பாடசாலை மாணவிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதோடு பாலியல் துஷ்பிரயோகத்திலும் ஈடுபட்டுள்ளனர்

குறிப்பாக அவர் அபிவிருத்தி உத்தியோகத்தர் பதவிக்காக நியமிக்கப்பட்டு ஆசிரியர் சேவையில் ஈடுபடுத்தப்பட்டு வந்த நிலையில் குறித்த ஆசிரியர் மற்றும் மாணவர்கள் சிலர் இணைந்து மாணவிகள் பலரின் நிர்வாண புகைப்படங்களை வைத்து அச்சுறுத்தி அவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவங்கள் பல பதிவாகியுள்ளது.

குறிப்பாக இந்த ஆசிரியர் மாணவர்களை பயன்படுத்தி மாணவர்களை மாணவிகளோடு காதல் வலையில் விழுத்தி அவர்கள் ஊடாக அந்த மாணவிகளை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறான பின்னணியில் இந்த ஆசிரியருடைய தொலைபேசியில் இருந்த ஆவணங்கள் பொலிசாருக்கு வழங்கப்பட்டதை தொடர்ந்து குறித்த விடயம் தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண்கள் சிலரை விசாரணைக்கு அழைத்து பொலிசார் அவர்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தியபோது ஒரு மாணவியை ஆசிரியர் பாலியல் துஷ்பிரயோகம் செய்தமை ஒரு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறான பின்னணியில் குறித்து ஆசிரியர் தலைமறைவாக இருந்த நிலைமையில் குறித்த மாவட்டத்தைச் சேர்ந்த 6 இளைஞர்களை பொலிசார் கைது செய்திருந்தனர்.

சுமார் பதினேழு பதினெட்டு வயதை உடைய இந்த ஆறு மாணவர்களையும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போது மாணவர் ஒருவருக்கு நீதிமன்றத்தில் எதிர்வரும் 30.6.2022 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதோடு ஏனையவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர் இவ்வாறான பின்னணியில் தலைமறைவாக இருந்த ஆசிரியர் இன்று சட்டத்தரணி ஒருவர் ஊடாக நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார்.

இந்த வேளையிலே இந்த பாதிக்கப்பட்ட நபர்கள் சார்பாக சட்டத்தரணி எஸ்.தனஞ்சயன் ஆயராகியுள்ளார்.

இதேவேளை முல்லைத்தீவு பொலிஸ் நிலையம் சார்பில் கருத்து தெரிவித்த பொலிஸ் உத்தியோகத்தர் ஜனன் அவர்கள் குறித்த விசாரணை தொடர்பிலே ஆசிரியரிடம் இன்னும் விசாரணைகள் மேற்கொள்ளவேண்டியுள்ளதாகவும் சான்று பொருட்களை பெற்றுக் கொள்ள வேண்டியுள்ளதாகவும் மேலதிக தகவல்களை பெற வேண்டிய நிலையிலும் இவருக்கு பிணை வழங்குகின்ற போது இந்த விசாரணைகளை சரியாக செய்ய முடியாது எனவும் சான்றுப் பொருட்கள் மற்றும் ஆவணங்கள் பெற்றுக்கொள்வதில் இடர்பாடுகள் உள்ளதை தெரிவித்து அவருக்கு பிணை விண்ணப்பத்தை நிராகரிக்குமாறு தெரிவித்தார்.

இந்த சம்பவங்களையும் இந்த சம்பவத்தில் உடைய பாரதூர தன்மையையும் நன்கு அவதானித்த முல்லைத்தீவு நீதிமன்றத்தின் நீதிபதி ரி.சரவணராஜா அவர்கள் குறித்த நபரை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.


Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad